பெண்களின் பெருமை பேசும் ஆவணங்கள்! தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

பெண்களுக்கு பல நலத் திட்டங்களை வழங்கிவரும் அரசாக இருக்கும் தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு அறிக்கைவிட்டுள்ளது. 

மார்ச் 6, 2024 - 13:23
 0  4
பெண்களின் பெருமை பேசும் ஆவணங்கள்! தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

மார்ச் 8ந் தேதி உலகமே மகளிர் தினத்தை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறது. இத்தகைய நாளையே மகளிர் போராடித்தான் பெற்றார்கள். இந்த நன்னாளை முன்னிட்டு, பெண்களுக்கு பல நலத் திட்டங்களை வழங்கிவரும் அரசாக இருக்கும் தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு அறிக்கைவிட்டுள்ளது. 

அந்த செய்தி வெளியீட்டில்....

தமிழ்நாட்டில்தான் ஆண் பெண் வேறுபாட்டை நீக்கி 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்ததோடு, 5 பெண்களை ஓதுவார்களாக பணியில் அமர்த்தி அதிரடி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. 

பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிக்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் பல லட்சம் மாணவிகள் பயனடைவதை மேற்கோள் காட்டியுள்ளது. 

குடும்பத் தலைவிகளாக அயராது உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ . இந்த திட்டத்தால், பெண்கள் பெரிது பயனடைந்துள்ளனர். 

என்று பெண்களுக்கான பெருமை பேசும் ஆவணங்களாக தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow