காலை நேரத்தில் தப்பி தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..! 

ஆகஸ்ட் 3, 2023 - 21:00
 0  24
காலை நேரத்தில் தப்பி தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..! 
காலைநேர உணவு
காலை நேரத்தில் நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் மென்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், நம்மில் பலரும் அதை பின்பற்றுவதே கிடையாது. அதன் விளைவு பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றில் இருந்து தப்பிக்க காலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
 
காபி, டீ... இரவு உணவுக்கும் மறுநாள் காலையில் உணவு எடுத்துக்கொள்வதற்கும் இடையில் அதிகம் நேரம் இருப்பதால், நமது வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாமல் அதிகப்படியான அமிலம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில், டீ அல்லது காபி குடிக்கும் போது, இரைப்பையில் புண் ஏற்படும். அதாவது, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல. இதனால், வெகு விரைவில் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்னும் சிலருக்கு அஜீரண பிரச்சனைகளும் ஏற்படும். 
 
நம்மில் பலருக்கும் இனிப்பும், காரமும் மிகவும் பிடித்த ஒரு சுவை. இவற்றை காலை நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து சர்க்கரை நோயை ஏற்படுத்தும். அதேபோல தான் காரம் மிகுந்த உணவுகளும். அதிக காரமும், அதிக மசாலாவும் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்க செய்து, வயிறு எரிச்சல், மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இரவு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை, ஜீரண சக்தி குறைவாக இருக்கிறது என்று கூல் டிரிங்ஸை ஃபிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்துக்குடிப்போம். அப்படி குடிக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் சீராவது தடைபடும். இவை நாள் முழுக்க செரிமான அமிலத்தை சுரந்துக்கொண்டே இருக்கும். அதன் விளைவு குடல்புண், அல்சர் தான்.
 
காலையில் லேட்டாக எழுந்திருத்து அரக்க பறக்க வேலை கிளம்புபவர்கள், காலை ஆதாரமாக பழங்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும். பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இருப்பினும், சிட்ரஸ் நிறைந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், இரவு முழுவதும் இரப்பையில் சுரக்கும் அமிலத்தோடு இந்த சிட்ரஸ் பழங்கள் சேரும் போது, நெஞ்செரிச்சலை உருவாக்கும்.
 
அதேபோல, காலை நேரத்தில் வாழைப்பழத்தையும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இதய நோய்களுக்கு காரணமாகிவிடும். பாலை காட்டிலும் தயிர் மிகவும் நல்லது தான். ஆனால், இதை காலை உணவாக சாப்பிடும்போது இவற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அமிலமானது அழித்துவிடும். இதனால் எந்த நன்மையும் உடலுக்கு கிடைக்காது.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow