508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி 6ம் தேதி தொடக்கி வைக்கும் மோடி!

சென்னை கோட்டம் ரயில்வேவில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் cctv கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி முடிவடைய உள்ளதாக சென்னை கோட்டம் ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா தெரிவித்தார்

ஆகஸ்ட் 4, 2023 - 19:18
 0  5
508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி 6ம் தேதி தொடக்கி வைக்கும் மோடி!
ரயில் நிலையம்
அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் உட்பட இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன முறையில் மேம்படுத்தும் பணிக்கு வரும் 6 ஆம் தேதி பிரதமர் காணொளி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளதாக சென்னை கோட்டம் ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா தெரிவித்தார். 
 
இதுகுறித்து சென்னை கோட்டம் ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்களும் புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தில் காசர்கோட், பையனூர், வடக்காரா, திரூர், சொரணூர், கர்நாடக மாநிலத்தில் மங்களூரு என 25 ரெயில் நிலையங்கள் ரூ.616 கோடியில் அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளன. 
 
இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளோம். சென்னை கோட்டம் ரயில்வேவில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் cctv கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய உள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையில், பராமரிப்பு, குறைவான பயணிகள் பயணம் செய்தல், ரயில்பாதை மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக, 26 மின்சார ரயில்களின் சேவையை குறைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில் சேவையான MRTS எனப்படும் பறக்கும் ரயில் நிலையத்தை சென்னை மெட்ரோ ரயிலுடன் இணைப்பது தொடர்பாகவோ அல்லது கொடுப்பது தொடர்பான எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை.
 
புறநகர் ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் செல்போன் போன்ற உடமைகளை பறிமுதல் செய்ய கூடாது. அவ்வாறு செய்யும் பரிசோதகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow