சிந்துவெளி நாகரிகத்தை மாற்றும் சூழல் தற்போது உள்ளது..! - கி.வீரமணி 

ஆகஸ்ட் 4, 2023 - 19:30
 0  9
சிந்துவெளி நாகரிகத்தை மாற்றும் சூழல் தற்போது உள்ளது..! - கி.வீரமணி 
கி.வீரமணி
கற்பனை இதிகாசங்களை வரலாற்றாக மாற்றும் சூழல் தற்போது உள்ளது. ஜோதிடம் என்பது அறிவியல் கிடையாது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாத தாக்குதல் தலைப்பில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
 
இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: 
 
கற்பனை இதிகாசங்களை வரலாற்றாக மாற்றும் சூழல் தற்போது உள்ளது. ஜோதிடம் என்பது அறிவியல் கிடையாது, அது ஒரு சூடோ சயின்ஸ். astrology more than Astronomy விஞ்ஞானி மாநாட்டில் பிரதர் மோடி பேசும் போது, பிள்ளையாருக்கு கழுத்து இல்லாத போது பரமசிவன் உடனடியாக பார்வதிக்கு தெரியாமல் இருக்க யானை கழுத்தை வைத்துள்ளனர். இது பிளாஸ்டிக் சர்ஜிரி முன்பே இருந்துள்ளது என்றார். 
 
அப்போது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் இனிமேல் விஞ்ஞானி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். சிந்து வெளி நாகரிகத்தை மாற்றும் சூழல் தற்போது உள்ளது. நடந்ததை நடந்தாக தெரிவிப்பது தான் வரலாறு. ஆரிய, திராவுடர்கள் கால்டுவெல் தான் தெரிவித்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர், திரைகடல் தேடியும் திரவியம் தேடு என்பது தான் திராவிடம். 
 
1919 ஆண்டு அசல் மனு தர்மத்தின் 10வது அத்தியாத்தில் பிராமண இடத்தில் உள்ளவர்களை வணங்காது, சத்தியர்கள் சூத்தராரதாகிவிட்டனர் என்று இடம் பெற்றுள்ளது. இந்த திரிபுவாதத்தால் மக்களிடையே பிரச்சினை உருவாக்கியுள்ளார்கள். உண்மையை காப்பாற்ற வேண்டும். மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தியுள்ளது, இது என்ன பரமாத்தும காலமா ?. 
 
உச்சநீதிமன்ற தலையிட்டு தான் உரிய நடவடிக்கைகள் வந்துள்ளது.  கீதையை பாடமாக வைத்து கொள்ளுங்கள் என பேசுகிறார். வேதத்தையை நமது கலாச்சாரம் என்று மத்தியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமையாகும்.
 
இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow