இயக்குநர் சாந்தகுமாரின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு

இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5, 2023 - 12:01
ஆகஸ்ட் 6, 2023 - 20:28
 0  54
இயக்குநர் சாந்தகுமாரின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு
ரசவாதி பர்ஸ்ட்லுக்

மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து அர்ஜூன்தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

செல்வராகவன் உதவியாளரான சாந்தகுமார், அருள்நிதி நடிப்பில் மெளனகுரு எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிரைம் திரில்லர் பாணியில் அமைக்கப்பட்ட திரைக்கதை, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அருள்நிதி சினிமா கேரியரில் முக்கிய படமாகவும் உள்ளது. 


அடுத்து இரட்டை வேடத்தில் ஆர்யா நடித்த மகாமுனி எனும் படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு புதிய திரை விருந்தை படைத்தது. தமிழ் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்ளும் சாந்தகுமார், அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்நிலையில், அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் கூட்டணியுடன் சாந்தகுமார் புதிய படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ரசவாதி என்று பெயரிடப்பட்டுள்ளது. வனப்பகுதி பின்னணியில், லாவண்யா ரவிச்சந்திரன் அமர்ந்திருக்க, அவரது தோள் மீது கை வைத்து விசாரிப்பது போல அர்ஜூன் தாஸ் அமர்ந்திருக்கும் வண்ணம், பர்ஸ்ட்லுக் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow