ஸ்ட்ராபெர்ரி பெண்ணே! உங்களைப் பார்த்து பாடணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் கொழுப்பு அமிலங்களும் நிரம்பியுள்ளன. மேலும் டார்க் சாக்லெட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளதால், அவை சருமம் எரிச்சல் அடைவதில் இருந்து காக்கிறது.

பிப்ரவரி 29, 2024 - 12:08
 0  1
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே! உங்களைப் பார்த்து பாடணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

ஸ்ட்ராபெர்ரி பெண்ணே! உங்களைப் பார்த்து பாடணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

ஸ்ட்ராபெர்ரி, சாக்லெட்டில் நமது சருமத்திற்கு நன்மைகள் தரக்கூடிய, பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை முகத்திலுள்ள கருமை நீங்கி பொலிவடையுச் செய்யும். அதை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.

ஸ்டிராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை குறைக்கும் கோடுகள் போன்றவற்றை சரிசெய்ய இது உதவுகிறது. இயற்கையாகவே முகத்தில் ஒருவித பளபளப்பு உண்டாகும். 

நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் கொழுப்பு அமிலங்களும் நிரம்பியுள்ளன. மேலும் டார்க் சாக்லெட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளதால், அவை சருமம் எரிச்சல் அடைவதில் இருந்து காக்கிறது.

தேவையான பொருட்கள்

பிசைந்த ஸ்ட்டிராபெர்ரி
சிறிய துண்டு சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லேட்

தயாரிப்பு முறை

டபுள் பாய்லர் முறையில் சாக்லெட்டை உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

உருக்கிய டார்க் சாக்லெட்டில், பிசைந்த ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் ஸ்மூத் பேஸ்ட்டாகக் கலந்து கொள்ளவும். அவ்வளவு தான் பேஸ்மாஸ்க் ரெடி.

பயன்படுத்தும் முறை

ஃபேஸ் மாஸ்க்கை தடவி, 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக உலர வைக்கவும். அதன்பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவினால் போதும்.

சருமம் எவ்வளவு மிருதுவாகவும், ஈரப்பதத்துடன் இருக்கிறது என்பதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். 

இந்த ஃபேஸ்மாஸ்க்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தலாம். 

நம் சருமத்தை பளபளப்பாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள எப்போதும் ஆடம்பரமான பொருட்கள் தேவையில்லை. இயற்கையிலேயே வீட்டில் தயாரிக்கப்படும் இதுபோன்ற சில ஃபேஸ் மாஸ்க்குகள் போதுமானது.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow