நீங்க அதிகமாக ராகி உணவு உண்கிறீர்களா? அப்ப இதைப் படிங்க!

ராகி  சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்ட பின்பு அன்றைய நாள் முழுக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

மார்ச் 8, 2024 - 18:03
 0  3
நீங்க அதிகமாக ராகி உணவு உண்கிறீர்களா? அப்ப இதைப் படிங்க!

ராகி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

 

ராகி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். அதனால் கோடை காலங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

 

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாக ராகி உணவுகளை எடுத்துக் கொண்டால் தைராய்டு சுரப்பி மற்றும் தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்படும். அதனால் ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் ராகியைத் தவிர்ப்பது நல்லது.

 

ராகி அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுகுடல் பாதிப்பு போன்றவை ஏற்படும். இதனால் டயேரியா, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

 

ராகியை குளிர் காலங்களில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகியிலும் அதிக அளவில் குளிர்ச்சித்தன்மை நிரம்பி இருப்பதால் தவிர்ப்பது நல்லது. அதோடு பசியின்மை, உடல் வீக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

 

ராகி  சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்ட பின்பு அன்றைய நாள் முழுக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

 

ராகி அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

 

உடல் எடையை அதிகரிக்க விரும்பும் நபர்கள் ராகி சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதில் அதிக அளவில் பசையம் இல்லாததால் உடல் எடை குறைவு ஏற்படும். எனவே எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் ராகியை தவிர்க்க வேண்டும்.

 

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ராகி உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது ஒரு பசி அடக்கியாக செயல்படுகிறது.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow