நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி எம்பி இடைநீக்கம் 

-

ஆகஸ்ட் 4, 2023 - 13:02
 0  6
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி எம்பி இடைநீக்கம் 
ஆம் ஆத்மி எம்பி சுஷில்குமார் ரிங்கு
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி எம்பி சுஷில்குமார் ரிங்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 20 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அப்போது, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசக்கோரி, எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பி.,கள் கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒழுங்காக நடைபெறாமல் முடங்கி வருகிறது. 

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு சென்று, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பி சுஷில் குமார் ரிங்கு சத்தம் எழுப்பினார். இதைத்தொடர்ந்து அவைத்தலைவர், எம்பி சுஷில்குமார் ரிங்குவை இடைநீக்கம் செய்யகோரி தீர்மானம் கொண்டு வந்தார். 
இதையடுத்து மக்களவையில் ஆவேசமான முறையில் நடந்து கொண்டதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி., சுஷில் குமார் ரிங்கு மழைக்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை மக்களவை நிறைவேற்றியதால், ரிங்கு சபாநாயகர் முன்பு வந்து மசோதா நகலை கிழித்து வீசியெறிந்தார். 
மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா, ரிங்குவை நாடாளுமன்ற அவையில் கண்ணியம் தவறியதாகக்கூறி, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் அனுப்பினார்.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow