கொளுத்தும் வெயில்! சருமம் காப்போம்! எப்பொழுதும் ஜொலிப்போம்!

பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய சருமத்தின் தன்மையும் மாற்றமடையும். அதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே நம்முடைய சருமத்தை அதிகமாக வறட்சியாக்கிவிடும்.

ஏப்ரல் 1, 2024 - 12:01
 0  2
கொளுத்தும் வெயில்! சருமம் காப்போம்! எப்பொழுதும் ஜொலிப்போம்!

சிலருக்கு சருமம் மிக வறட்சியாக இருக்கும். சிலர் எண்ணெய் சருமம் அதிகமாக இருக்கிறது என்று அதை கட்டுப்படுத்த அதிகமாக க்ரீம்களைப் பயன்படுத்தி மொத்தமாக எண்ணெய் பசை இல்லாமல் வறண்டு விடும். இந்த இரண்டு பிரச்சினைக்கும் சேர்த்து தான் ஒரு தீர்வை நாம் பார்க்கப் போகிறோம்.

 

உலக அளவில் அழகு சாதனப் பொருள்களின் விற்பனை மார்க்கெட் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளைக்குப் பல கோடி ரூபாய்க்கு அழகு சாதனப் பொருள்கள் விற்பனையாகிறதாம். ஒவ்வொரு சருமத்துக்கு ஏற்றபடி ஒவ்வொரு க்ரீம் என ஆயிரக்கணக்கான ரூபாயை பெண்கள் இதற்காகவே செலவு செய்கிறார்கள். ஆனால் பயன் பெரிதாக இருப்பதில்லை. பதிலுக்கு பக்க விளைவுகள் தான் அதிகம். ஆனால் நம்முடைய தாத்தா, பாட்டி காலம் முதல் நம் அம்மாக்கள காலம் வரையிலும் எல்லாமே நம்முடைய அடுப்பங்கரைக்குள் இருக்கும் பொருள்களைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.

 

அப்படி வீட்டிலுள்ள இயற்கையான பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் முதல் நன்மை, அது எந்த பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. இரண்டாவது நிரந்தரமான பலன்களைக் கொடுக்கும். மூன்றாவது நீங்கள் வாங்கும் அழகு சாதனப் பொருள்களோடு ஒப்பிடும்போது செலவு பல மடங்கு குறைவு.

 

பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய சருமத்தின் தன்மையும் மாற்றமடையும். அதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே நம்முடைய சருமத்தை அதிகமாக வறட்சியாக்கிவிடும்.

சருமத்தில் உள்ள நீர்ச்சத்து முழுவதும் உறிஞ்சப்படுவதால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.இந்த பிரச்சினை ஏற்படாமல் எப்படி தடுக்க முடியும்.

 

பொதுவாக மாய்ச்சரைஸர்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சிகளை சரிசெய்து, சருமத்தை நீர்ச்சத்தோடு மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் மாய்ச்சரைஸர்களின் விலையோ மிக மிக அதிகம். அதற்கு நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையான ஒரு மாய்ச்சரைஸர் க்ரீமைத் தயாரித்துப் பயன்டுத்த முடியும். இதற்கு வெறும் மூன்றே மூன்று பொருள்கள் தான் தேவை. அவை என்னென்ன? எப்படி தயார் செய்து பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

 

நேச்சுரல் மாய்ச்சரைஸர்

 

தேவையான பொருள்கள்

 

ரோஸ் வாட்டர் - 50 மில்லி

 

கிளிசரின்  - 2 தேக்கரண்டி

 

வைட்டமின் ஆயில் - அரை தேக்கரண்டி (கேப்சியூல் என்றால் 2)

 

செய்யும் முறை

 

முதலில் கிளிசரினையும் வைட்டமின் ஆயிலையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள். பிறகு ரோஸ்வாட்டரைச் சேர்த்து நன்கு ஒன்றுடன் ஒன்று கலக்கும்படி கலந்து கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இவ்வளவு தான். உங்களுடைய சருமத்தில்  பல அற்புதங்களைச் செய்யும் மாய்ச்சரைஸர் தயாராகிவிட்டது.

 

எப்படி பயன்படுத்துவது?

 

குளித்து முடித்ததும் டோனருக்கு பதிலாகவும் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாடி லோஷன் மற்றும் மாய்ச்சரைஸருக்கு பதிலாக இந்த ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

 

முகத்தில் தடலி ஒரு 5 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்து விட்டு, பின்பு வழக்கமாக நீங்கள் செய்யும் மேக்கப்பை செய்து கொள்ளலாம்.

 

இனியாவது கண்ட க்ரீமையும் விட்டுவிட்டு இந்த நேச்சுரல் மாய்ச்சரைஸரை செலவே இல்லாமல் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow