World Bio Fuel Day: எதிர்கால எரிபொருள் 'ஹைட்ரஜன்'தான்.. எப்படி தெரியுமா..?

நாம் பயன்படுத்தும் அனைத்து ரக வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசல் முக்கிய எரிபொருட்களாக உள்ளன. ஆனால், எதிர்காலத்தில் பெட்ரோல், டீசலை ஓரங்கட்டிவிட்டு ஹைட்ரஜனே முக்கிய எரிபொருளாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 10, 2023 - 16:33
ஆகஸ்ட் 10, 2023 - 16:37
 0  121
World Bio Fuel Day: எதிர்கால எரிபொருள் 'ஹைட்ரஜன்'தான்.. எப்படி தெரியுமா..?
இன்றைய காலகட்டத்தில் வாகன எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் வாகனங்களின் பயன்பாடுகள் அதிகமாக உள்ளதே காரணம். இன்றைய சூழ்நிலையில் எல்லோருமே கட்டாயமாக இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். அதே போல் நான்கு சக்கர வானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கின்றது. பொது மக்களின் பயணங்கள் அதிகமான காரணத்தால் பொது போக்குவரத்தும் அதிகமாகவே உள்ளன. 
 
இடம்பெயர்வு என்பது இன்றைய நிலையில் வாகனங்களை நம்பியே உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப எல்லா பயன்பாடுகளும், நாகரிகமான வாழ்க்கையையே மக்கள் விரும்ப தொடங்கிவிட்டனர். வளர்ந்த நாடுகள் தங்களின் தேவைகளை மிக நேர்த்தியாக நிவர்த்தி செய்து கொண்டு வருகின்றனர். அதில் இன்று நாம் பேசும் தலைப்பு ஹைட்ரஜன் எரிசக்தி பற்றிதான். இந்த ஹைட்ரஜன் எரிசக்தி என்றால் என்ன? என்று கேட்டால், நீங்கள் சுலபமாக அரிய வாகனங்கள் சில பெட்ரோல், டீசல் மற்றும் CNG வாயு போன்றவற்றால் இயங்கிக் கொண்டு வருகிறது என கூறலாம். 
 
இதன் உற்பத்தியும் காலங்காலமாக பயன்படுத்த அதன் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் நம் வாழ்க்கையில் எரிபொருள் செலவினம் அதிகமாகவே உள்ளது. எனவே, இதனை சரி செய்ய விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து கொண்டே உள்ளனர். அதிலும், இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரிக் பைக், கார் மற்றும் கனரக வாகனங்கள் அதிகப்படியாக வந்து கொண்டுள்ளது. இவைகள் எரிபொருள்களை தவிர்த்து மின்சாரம் சேமிப்பு (Power Backup)கொண்டு அரிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 

ஆனால், அதிகப்படியான வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவையின் அடிப்படையில் இயங்கி வருகின்றது. இதனால், வாகனங்களிடமிருந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு, கரியமில வாயுக்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றது. அதாவது ஒரு நிலையான அமைப்பு (Sustainable System) தேவை என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் உள்ளோம். இந்த கரிய மில வாயுவினால் உலக வெப்பமாதல், காலநிலை மாற்றங்கள், மழை தாமதம் என எண்ணற்ற பிரச்சினைகளை இந்த உலகம் சந்தித்து வருகின்றது. எனவே, அதற்கு ஒரு மாற்று வழியை நம் விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் ஹைட்ரஜன் எரிசக்தி (Hydrogen Fuel) ஒரு நல்ல பலனை தரும் என நம்பிக்கை தந்துள்ளனர். 
 
அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் இதற்கு பதிலாக ஹைட்ரஜன் வாயுவின் பயன்பாடுகளை அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இந்த ஹைட்ரஜன் எரிசக்தி பயன்பாட்டுக்கு வந்தால், சுற்றுசுழல் பாதிப்பு குறையும். உலக வெப்பமயமாதல் குறையும். எனவே, இந்த ஹைட்ரஜனை பயன்படுத்துவதால் அதில் எந்த சுற்றுசூழல் சீர்கேடுகளும் இல்லை. இந்த ஹைட்ரஜன் இயற்கையாகவே வளிமண்டலத்தில் இருப்பவை தான். இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
 
இந்த ஹைட்ரஜனை கொண்டு நேரடியாக மின்சாரம் தயாரிக்கலாம் என்பதால், மின்சார வாகனங்களும் அதிகப்படியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பயன்பாடுகளால் பெட்ரோல் மட்டும் டீசலின் தட்டுபாடுகளும் குறையும்.
எல்லாவற்றிற்கு மேல், விலையும் குறைந்து காணப்படும். விலை குறைவாக இருந்தால் வானங்களில் பயன்பாடுகள் அதிகமாகும். இதனால் சுற்று சூழல் பாதிப்பு வராமல்இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதனை தயாரிக்க மிகுந்த செலவினம் செய்ய வேண்டிய நிலை என்பதால், இதனை தயாரிப்பதில் எந்த நிறுவனமும் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. 

அதே போல், இதனை சேமிப்பதும் மற்றும் போக்குவரத்துக்காக இடமாற்றம் செய்வதாலும் இதில் பல சிக்கல்கள் உள்ளது. மேலும், இவை எளிதில் தீ பற்றக்கூடியதாகவும், ஆவியாகும் தன்மையுடைதாகவும் உள்ளதால் இதனை இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. ஆனால் தேவை அதிகமாக இருக்கும்பட்சத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்டறிந்தால் இவை சாத்தியம் தான். எல்லா கண்டுபிடிப்புகளும் ஏதோ ஒரு சிறு முயற்சிகளால் தான் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் காலம் தான் ஒவ்வொரு நாளும் நல்ல பதில்கள் கூறும். 
 
அது போல் இதுபோன்ற தொழில்நுட்பமும் விரைவில் சமூகத்திற்கு வரும். அந்த காலம் வரும்போது சுற்று சூழல் பாதிப்புகளும் குறையும். மனிதர்களுக்கு எல்லாவற்றிற்கும் தேவை வரும் போது, அதில் ஆராய்ச்சிகளும் அதிகமாக இருக்கும். அவற்றிற்கும் தெளிவான விடை கிடைக்கும். எனவே, ஹைட்ரஜன் எரிபொருளும் மற்ற எரிப்பொருளுக்கு சிறந்த மாற்று எரிபொருளாக நிச்சயமாக மாறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
 
 
கட்டுரை - முனைவர். வீ.மோகன்ராஜ்
அறிவியல் அலுவலர்.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow