உங்களுக்கு லோ பிபி இருக்கா? அலட்சியமாக இருக்காதீர்!

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்தது. பொதுவாக, நார்மல் இரத்த அழுத்தத்திற்கு, டயஸ்டாலிக் அழுத்தம் 95 mmHg-க்கு மேல் அதிகரிக்க கூடாது. மேலும் சிஸ்டாலிக் அழுத்தம் 140 mmHg க்கு மேல் அதிகரிக்க கூடாது. இருப்பினும், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் அழுத்தம் இரண்டும் மிகக் குறைவாக இருந்தால், உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருக்கலாம்.

மார்ச் 4, 2024 - 11:49
 0  2
உங்களுக்கு லோ பிபி இருக்கா? அலட்சியமாக இருக்காதீர்!

நமது ஆரோக்கியத்தை அளவிடும் சில முக்கிய விஷயங்களில் ரத்த அழுத்தம் முக்கியமானது. இளம் வயதிலேயே உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

 இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்தது. பொதுவாக, நார்மல் இரத்த அழுத்தத்திற்கு, டயஸ்டாலிக் அழுத்தம் 95 mmHg-க்கு மேல் அதிகரிக்க கூடாது. மேலும் சிஸ்டாலிக் அழுத்தம் 140 mmHg க்கு மேல் அதிகரிக்க கூடாது. இருப்பினும், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் அழுத்தம் இரண்டும் மிகக் குறைவாக இருந்தால், உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருக்கலாம்.

 குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதை கீழ்வரும் அறிகுறிகளை வைத்து கண்டுகொள்ளலாம்.

 தலைச்சுற்றல்,

படுக்கையிலிருந்து எழும்போது ஏற்படும் கிறுகிறுப்பு,

மங்கலான பார்வை,

சோர்வு,

லேசான தலைவலி,

குமட்டல்,

மயக்கம்,

குறைந்த இரத்த அழுத்தம் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது கர்ப்ப காலங்களில் பெண்கள் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம்குறைந்த இரத்த அழுத்தம் இரத்த இழப்பு, நோய்த்தொற்றுகள், இரத்த சோகை அல்லது டிஸ்ரித்மியாவைக் போன்றவற்றை குறிக்கும்குறைந்த ரத்த அழுத்தத்திற்கான ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே அதைக்  கண்டறிய மருத்துவரை அணுகுவது நல்லது.

 சிகிச்சைகள்

 குறைந்த இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையானது அதன் காரணம் என்ன என்பதைப் பொறுத்தது சிகிசசைகள் மாறுபடலாம்.

 தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஆகியவற்றைத் தடுக்க எப்போதும் படித்திருந்து அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்தபின் மிக மெதுவாக எழுந்து நிற்க வேண்டும்.

 போதுமான அளவு அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow