ராகுல்காந்திய விடுதலை செய்யல..தீர்ப்புதான் நிறுத்தி வைத்துள்ளார்கள்..! - ஹெச்.ராஜா

ராகுல்காந்தியின் எம்.பி பதவி நீக்கப்படுவதோ அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதோ சட்டத்தின் படிதான் நடக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் 4, 2023 - 18:48
ஆகஸ்ட் 4, 2023 - 18:50
 0  4
ராகுல்காந்திய விடுதலை செய்யல..தீர்ப்புதான் நிறுத்தி வைத்துள்ளார்கள்..! - ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
ராகுல்காந்தி விடுதலை செய்யப்படவில்லை, குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவின் மேல்விசாரணைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புதான் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 
குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது. 
 
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறியதாவது:
 
ராகுல்காந்தி விடுதலை செய்யப்படவில்லை, குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை மேல்விசாரணைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புதான் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை தொடர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கு, பாஜகவோ மத்திய அரசோ தொடர்ந்த வழக்கு. இறுதி தீர்ப்பு எப்படி வந்தாலும் இது அனைவருக்குமான முதற்பாடம். 
 
தமிழ்நாட்டில் உள்ள திராவிட கருத்தாளர்கள்,  ஒரு சமூகத்தை அவதூறாக பேசுவது மிகுந்த தவறு, தமிழகத்தில் பெரியாரில் ஆரம்பித்து மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் ஒரு சமூகத்தை தவறாக பேசிக் கொண்டுதான் உள்ளார்கள். ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு பாடமாக அமையும்.
 
ராகுல்ஜாந்தி தரப்பில் வாதமே கொடிய குற்றம் இல்லை என்றுதான் வாதாடப்பட்டுள்ளதே குற்றமில்லை என வாதாடப்படவில்லை. எந்தவொரு சமுதாயத்தை பற்றி பேசினாலும் குற்றம் குற்றம்தான். வழக்கு இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்பதால் காங்கிரஸ் இதற்கு கொண்டாட்டத்தில் ஈடுபடத் தேவையில்லை. 

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு எதிரான சட்டமுன்வடிவை ராகுல்காந்தி பொதுவெளியில் கிழித்து எறிந்தார். அதனால் அவரது தற்போதைய நிலைக்கு அவரேதான் காரணம். உச்சநீதிமன்றம் தற்போது வரை தண்டனை குறித்துதான் கூறி வருகிறதே தவிர அவரை தண்டித்ததே தவறு என கூறவில்லை. 
 
மீண்டும் ராகுல் காந்தி பாராளுமன்றம் வந்தாலும், ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் இதுவரை என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். வேண்டுமென்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஒரு வாக்கு அதிகரிக்கலாம்.
 
தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பமே இல்லாமல் உள்ளது. INDIA கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் என்கிற முடிவே எடுக்காமல் உள்ளனர். பிரதம வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவே எடுக்க இணக்கம் இல்லாத அளவில்தான் அந்த கூட்டணி உள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி பதவி நீக்கப்படுவதோ அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதோ சட்டத்தின் படிதான் நடக்கும்.
 
இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow