நாடாளுமன்றத்திற்கு ராகுல்காந்தி வருவதை இனி தடுக்க முடியாது..! - எம்பி. திருமாவளவன் 

ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கம் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை வரவேற்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 4, 2023 - 18:28
 0  23
நாடாளுமன்றத்திற்கு ராகுல்காந்தி வருவதை இனி தடுக்க முடியாது..! - எம்பி. திருமாவளவன் 
எம்பி திருமாவளவன்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்தியின் வெற்றி என்பதை விட ஜனநாயகத்தின் வெற்றி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான  தொல் திருமாவளவனின் சகோதரி பானுமதி  நினைவு நாளையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து தொல்.திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாராட்டுதலுக்குரிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியின் வெற்றி என்று சொல்வதைவிட ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்ல வேண்டும். 

ராகுல் காந்தி பிரதமர் குறித்தும், ஆட்சி குறித்தும் குறிப்பாக பிரதமருக்கும் அதானிக்கும் உள்ள உறவு குறித்தும் மக்களவையில் ராகுல் காந்தி பேசியது அவர்கள் அவமானப்பட்டு போனார்கள். அதானி குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசியதால் இனிமேல் நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்று சட்டப்பூர்வமாக ராகுல் காந்தியின் பதவியை பறிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கையாக கருதப்பட்டது இன்று அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 
ராகுல் காந்தியின் பதவியை பறிக்கும் உள்நோக்கத்தோடு தான் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றமே தனது கருத்தை பதிவு செய்துள்ளது. தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சி அடைகிறது. ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைக்காலமாக நிறுத்தி வைத்திருப்பதால் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தானாகவே ரத்தாகிறது. ஆகவே ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் இயங்க முடியும். ‌ திங்கட்கிழமை ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை வரக்கூடாது என்று தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்துக்களை  ஒருங்கிணைக்கும் வேலையை பாஜக சங் பரிவாரங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ஹரியானாவில் இல்லாமியர்கள் கொல்லப்பட்டதும், ரயிலில் இல்லாமியர்கள் கொல்லப்பட்டதும் இதன் சாட்சிகள். இது திட்டமிட்ட வெறுப்பு அரசியலின் விளைவு. சீமானுக்கு தோழமையோடு கூறுவது என்ன என்றால்.. அவர் பேசுவது சனா தன சக்திகளுக்கு பயனளிக்கக் கூடியதாக  இருக்கிறது. இன்று இருப்பதிலேயே மிக ஆபத்தானதாக  இருப்பது சனாதன சக்திகளின் வெறுப்பு அரசியல் தான். இந்த வெறுப்பு அரசியலை எதிர்த்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து குரல் கொடுப்பது தான் நாட்டுக்கும் நல்லது. அவர்களது எதிர்காலத்துக்கும் நல்லது.
 
மதம் அடிப்படையில் பார்க்க கூடாது. மொழி அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று சீமான் கூறுகிறார். மொழி அடிப்படையில் பார்த்தால் பெரும்பான்மையினர் என்று கூறுகிறார். அப்படி பார்த்தால் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். சங்பரிவார்கள்  பேசுவது மத அடிப்படையிலான பெரும்பான்மை. சிறுபான்மை. அந்த அரசியலை சீமான் திசை திரும்புகிறார். கற்பனையாக இஸ்லாமியர் மீதும் கிறித்துவர் மீதும் பெரும்பான்மையை திணிக்க பார்க்கிறார். இந்த மொழியை பேசுகிறார்கள் என்று தேடி பிடித்து கொல்லவில்லை. இந்த மதத்தை சேர்ந்தவர் என்று தான் கொல்கிறார்கள்.  சீமான் இல்லாத ஒன்றை கற்பிதம் செய்கிறார். இது நூற்றுக்கு நூறு சங் பரிவார்களுக்கு துணை போவதாகும். இந்த அரசியல் ஆபத்தானது.
 
இவ்வாறு, திருமாவளவன் தெரிவித்தார். 

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow